News January 20, 2025

முடிவை மாற்றிக்கொண்ட விஜய் ஆண்டனி

image

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. ஹீரோ ஆன பிறகு அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்தார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன் அவர் இசையமைத்த மதகஜராஜா படத்தின் பாடல்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், பிற படங்களுக்கு மீண்டும் இசையமைக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதனால் அவரது ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

Similar News

News August 22, 2025

தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ட்ரீட்!

image

சென்செஷன் ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ‘Dude’ படமும் தீபாவளிக்கு (அக்.20-ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள்கள் இடைவெளியில் 2 படங்கள் வெளிவருவது கலெக்‌ஷனை குறைக்கும் என சினிமா டிராக்கர்கள் தெரிவிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News August 22, 2025

விஜய்யின் பலம் என்ன? அண்ணாமலை கேள்வி

image

கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற தவெகவுக்கு சித்தாந்தம் வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தனது பலம் குறித்து ஏதும் பேசவில்லை என சாடியுள்ளார். பழங்கதைகளை கூறாமல் 21-ம் நூற்றாண்டின் அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?

News August 22, 2025

வெறிநாய்களை வெளியே விடக்கூடாது: SC

image

தெருநாய்களை பிடித்தாலும் அவற்றுக்கு கருத்தடை & புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திவிட்டு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட்டுவிட வேண்டும் என SC <<17481254>>தீர்ப்பளித்துள்ளது<<>>. அதேநேரம், ரேபிஸ் தொற்று பாதித்த நாய்களையும், வெறிப்பிடித்த நாய்களையும் தெருவில் விடவும் தடை விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து தேசியக் கொள்கை உருவாக்கவும் மத்திய அரசை SC வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!