News January 20, 2025

கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி: தர்ம அடி கொடுத்த மக்கள்

image

திருச்சி பெரிய கடைவீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில்,வாழைப்பழம் விற்பனை செய்யும் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயன்றனர். அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வாலிபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Similar News

News March 18, 2026

திருச்சி: அரசு மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சை!

image

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இதயத்துடிப்பு கோளாறுகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பெண்கள் 8 பேருக்கும், ஆண்கள் 5 பேருக்கும் என மொத்தம் 13 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

திருச்சி: ஹிலால் கமிட்டி கூட்டம் அறிவிப்பு!

image

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம், கமிட்டியின் தலைவரும், மாவட்ட அரசு ரம்ஜான் அறிவிப்பு தொடர்பாக, காஜியமான ஜலீல் சுல்தான் தலைமையில் நாளை (மார்ச் 19) நடைபெற உள்ளது. பெரிய கடை வீதி பேகம் பள்ளிவாசலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர, மாவட்ட ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், உலமாக்கள், முக்கிய சமுதாய பிரமுகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அரசு டவுன் ஹாஜி ஜலில் சுல்தான் தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!