News January 20, 2025
பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்

நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தி விளம்பரம் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆணையிட்டும் அவர் வராததால் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டதால் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 5, 2026
திருச்சி: ஆதார் முகாம் குறித்த அறிவிப்பு

திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர் dotiruchirappalli.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
CM பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவிப்பு

நிதிஷ்குமார் பிஹார் CM பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு MP ஆக ஆசை இருந்ததாக கூறிய அவர், அதற்காகவே தற்போது CM பதவியை விடுத்து ராஜ்யசபா MP-ஆக போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதிய ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பரில் 10-வது முறையாக CM ஆன இவர் இப்படி அறிவித்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News March 5, 2026
சங்கீதா விவாகரத்து.. வீடியோ ஆதாரம் உள்ளதாக தகவல்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, சங்கீதாவிடம் சில வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவற்றையெல்லாம் வெளியிட்டு சங்கீதா பிரஸ் மீட் நடத்தவிருந்ததாகவும், அதை விஜய் தரப்பு தடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வழக்கில் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


