News January 20, 2025
UGC வரைவு விதிகளை திரும்பப் பெறுக: ஸ்டாலின்

புதிய யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெறுமாறு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யுஜிசி வரைவு விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. மாநில பல்கலை.களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
குழந்தைகளுக்கு தமிழ் சூட்ட வைக்க இணையதள பக்கம்!

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டுவதற்காகவே TN அரசு புதிய இணைய பக்கத்தை தொடங்கியுள்ளது. <<16265547>>CM ஸ்டாலின் உத்தரவின் பேரில் <<>>தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் உருவான இந்த இணையதள பக்கத்தை அமைச்சர் PTR தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தொடங்கப்பட்டுள்ள <
News March 14, 2026
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியிருந்தது. இம்முறை ஒரு குடும்ப அட்டைக்கு ₹3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
News March 14, 2026
NR காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு இறுதியானது!

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி NR காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை உறுதி செய்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை பிரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.


