News January 20, 2025

கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் 25.01.2025 அன்று வடலூர், வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News March 9, 2026

கடலூர் மாவட்டத்தில் 33,437 மாணவர்களுக்கு தேர்வு

image

கடலூர் கல்வி மாவட்டத்தில் மார்ச் 11ஆம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 18,932 மாணவ, மாணவியர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 12,364 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 161 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 33,437 மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 9, 2026

கடலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 9, 2026

கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!