News January 20, 2025

NEXT LEVEL அப்டேட் கொடுத்த ஆர்யா, சந்தானம்

image

டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ஆவது பாகம் உருவாகி வருகிறது. பிரேம் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கலக்கலான புகைப்படங்களை மேலே காணலாம்.

Similar News

News March 12, 2026

பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

image

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

News March 12, 2026

349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹57,000 – ₹1.77 லட்சம் வரை கிடைக்கும். SHARE.

News March 12, 2026

20 ஆண்டுகளாக Ex.CM-ஐ கொல்ல ஆசை.. வாக்குமூலம்

image

பரூக் அப்துல்லா மீது <<19359220>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்தியதாக ஜம்முவை சேர்ந்த கமல் சிங்(63) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக ஃபரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன் என்ற அவர் இதுவே தன்னுடைய நோக்கம் எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் ஃபரூக்கை கொல்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தது. ஆனால் அவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!