News January 20, 2025
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தடை இல்லை!

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு தடை கோரிய கர்நாடக அரசின் கோரிக்கை மனுவை நீதிபதிகள் அபய் ஓஹா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இத்திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதி கூட மத்திய அரசு வழங்காத நிலையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர்.
Similar News
News March 18, 2026
திருவாரூர்: சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்தவர் கைது

முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராகுல் தலைமையில் போலீசார் கோவிலூரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த கோபால் (44) என்பவரை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து செல்போன், பணம், 3 மற்றும் நான்கு இலக்க எண்கள் எழுதிய துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
News March 18, 2026
எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.
News March 18, 2026
கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.


