News January 20, 2025

உள்ளூர் போட்டிகளை ஏன் விளையாட வேண்டும்?

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகள் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடி அசத்திய கருண் நாயர் CT தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனை விமர்சித்திருக்கும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அவர்களை தேர்வு செய்யவில்லை என்றால் உள்ளூர் போட்டிகள் விளையாடி என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 6, 2026

விஜய்க்கு ஆதரவாக இணைந்தனர்.. திருப்பம்

image

விஜய் – சங்கீதா விவாகரத்து ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்க, அதில் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார் விஜய். சங்கீதா, நடிகை என குறிப்பிட்டது த்ரிஷாதான் என பலரும் கூறிவரும் நிலையில், அவருடனே ஒன்றாக வந்து விஜய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதனையடுத்து, இதற்கு எதிர்ப்புகள் புயலாக கிளம்பியுள்ளன. அதேநேரம், மோகன் ஜி, ஸ்ரீமன் & விஜய் ரசிகர்கள் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக ஒன்றாக இணைந்து பதிவிட்டு வருகின்றனர்.

News March 6, 2026

TN-க்கு பொறுப்பு கவர்னர்.. யார் இந்த ராஜேந்திர அர்லேகர்?

image

TN-க்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவின் கவர்னராக 2025-ல் பதவியேற்றார். கோவாவை சேர்ந்த இவர், பாஜக மூத்த தலைவராக அறியப்படுகிறார். 2012-2015 காலக்கட்டத்தில் கோவாவின் சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். 2021-2023-ல் இமாச்சலின் 21-வது கவர்னராகவும், 2023-2025-ல் பிஹாரின் 42-வது கவர்னராகவும் பணியாற்றியுள்ளார்.

News March 6, 2026

ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்டை வெளியிடவுள்ளேன்: CM

image

1967-ல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, TN-ன் எழுச்சிக்கு விதையூன்றிய நாள் இன்று என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த நாளில் அடுத்த 5 ஆண்டுகளின் வளர்ச்சிக்கான ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்டை அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கு இன்று புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!