News January 20, 2025

விரைவில் வருகிறது ‘பிரேமலு-2’

image

பஹத் ஃபாசில் தயாரிப்பில் கிரிஷ் AD இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிரேமலு’. தமிழ், தெலுங்கிலும் இப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2வது பாகம் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் படப்படிப்பு தொடங்கி டிசம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 7, 2026

FLASH: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்துள்ளது. அதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $90.90 ஆனது. அதன் தாக்கத்தாலேயே 10 மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் <<19316790>>வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்<<>> விலை இன்று அதிகரித்தது. குறிப்பாக 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சம் தொட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 7, 2026

விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை: அண்ணாமலை

image

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எரிவாயு பயன்பாடு 45% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

News March 7, 2026

FLASH: விஜய் மனைவி சங்கீதா வேதனை!

image

செங்கல்பட்டு கோர்ட்டில் <<19319427>>சங்கீதா தாக்கல்<<>> செய்துள்ள புதிய மனுவில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 26 வருடங்கள் விஜய் உடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளதாகவும், நல்ல குடும்ப தலைவியாக இருந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

error: Content is protected !!