News March 26, 2024
நாகை நீதிமன்றம் அதிரடி உத்தரவால் பரபரப்பு

நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 2 நபருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையின் தலா ரூ.5,500 அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் மூலம் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
நாகை: அழகிப் போட்டியில் திருநங்கை சாதனை

நாகூரைச் சேர்ந்த திருநங்கை ரஃபியா, சமீபத்தில் கம்போடியாவில் நடந்த சர்வதேச அழகிப் போட்டியில் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 30 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில், ரஃபியா மூன்றாமிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
News November 28, 2025
நாகை: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
மழைநீர் சேகரிப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே விழிப்புணர்வு பேரணி, நாளை (28.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கொடியசைத்து பேரணி துவக்கி வைக்க உள்ளார்.


