News January 20, 2025
தினமும் காலை இதை செய்தால் வாழ்க்கை மாறும்

விடியற்காலையில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நாள் முழுக்க உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒரு நாளில் உங்களது முதல் வெற்றியே படுக்கையை விட்டு எழுந்திருப்பதுதான் என்று ஒரு பழமொழி ஒன்று. அதை பின்பற்றும் வகையில் சட்டென படுக்கையை விட்டு எழுந்து நடைபயிற்சி சென்றுவிட்டால், அரை மணி நேரத்தில் உங்களது நாள் விறுவிறுப்புடன் தொடங்கிவிடும்.
Similar News
News August 26, 2025
Parenting: சரியான Day Care-ஐ தேர்ந்தெடுப்பது எப்படி?

உங்கள் செல்லப்பிள்ளையை Day Care-ல் சேர்க்கப்போகிறீர்களா? எப்படி சரியான Day Care-ஐ தேர்வு செய்வது என குழப்பமா? இந்த விஷயங்களை கவனித்தாலே போதும். ▶அரசு அனுமதி பெற்ற Day Care-ல் சேருங்கள் ▶அங்குள்ள பணியாளர்கள் மற்ற குழந்தைகளிடம் எப்படி இருக்கிறார்கள் என கவனியுங்கள் ▶Day Care-ல் சிசிடிவி கேமரா இருக்கிறதா என பாருங்கள் ▶வாரத்திற்கு ஒருமுறை பெற்றோருடன் மீட்டிங் நடத்தப்படுமா என கேளுங்கள்.
News August 26, 2025
வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
ரேஷன் பொருள்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்க வேண்டுமா?

மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே கொண்டுவரும் திட்டத்தை ஆக.12-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதத்தின் 2-ம் சனி, ஞாயிறுகளில் ரேஷன் ஊழியர்கள் பொருள்களை கொண்டு வருவார்கள். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். SHARE IT