News January 20, 2025
பாஜக முக்கிய நிர்வாகிகள் விலகல்

வேலூரில் பாஜக முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்ட தசரதனை மாவட்ட தலைவராக நியமித்ததை எதிர்த்து, மாவட்டத் தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் தீபக் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்திலும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிய நிலையில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News March 17, 2026
ஈரானில் இருந்து பத்திரமாக வெளியேறிய 550 இந்தியர்கள்

போருக்கு மத்தியில் ஈரானில் சிக்கி இருந்த 550 இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரை மேற்கொண்ட 284 பேர் மற்றும் மாணவர்கள் உள்பட 550 பேரும் ஆர்மீனியா வழியாக ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து சவாலான காலத்தில் உதவிய அர்மீனியா அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
வரலாற்றில் இன்று

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ‘கலிபோர்னியம்’ என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர். ➤1925 – நடிகர் மேஜர் சுந்தரராஜன் பிறந்தநாள். ➤1990 – பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிறந்தநாள்.
News March 17, 2026
புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் தங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றாலும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.


