News January 20, 2025

‘எமர்ஜென்சி’ போராட்டத்தை ஏற்க முடியாது: கங்கனா

image

போராட்டம் காரணமாக ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தை பஞ்சாப்பில் பல இடங்களில் வெளியிட முடியவில்லை என படத்தின் இயக்குநர் கங்கனா வேதனை தெரிவித்துள்ளார். தான் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை என்றும், படத்தை வெளியிடாமல் முடக்குவது திரைக்கலைஞர்களை அவமதிப்பு போன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீக்கிய அமைப்புகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் பல இடங்களில் படம் வெளியாகவில்லை.

Similar News

News March 5, 2026

EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

image

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலைய விடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.

News March 5, 2026

ராஜ்யசபா வேட்பாளர் எல்.கே.சுதீஷ்: பிரேமலதா

image

தேதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதில் காங்., சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடும் நிலையில், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 5, 2026

மகளிர் உரிமைத் தொகை.. மேலும் 2 மகிழ்ச்சி செய்தி

image

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், முதல் அறிவிப்பாக இது குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் எப்போது விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!