News March 26, 2024
மதுரை தேர்தல் பணிகளில் குளறுபடிகள்

தேர்தல் பணிகளில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடு உத்தரவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு சூப்பர்வைசர் பணியும், முதுகலை ஆசிரியர்களுக்கு உதவியாளர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் சீனியர், ஜூனியர் ஈகோ யுத்தம் துவங்கியுள்ளது.
ஆசிரியைகளை அவர்கள் சேலை கலரைக் குறிப்பிட்டு மைக்கில் அழைப்பது வேறு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என்றனர்.
Similar News
News December 9, 2025
மதுரை: நடத்துநர் கொலைக்கு முன் நடந்த பகீர் சம்பவம்

திருமங்கலம் கல்லுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி தனியார் பேருந்து நடத்துனர். நேற்று நள்ளிரவு கப்பலூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் இருந்த போது, அங்கு வந்த நபர் அழகர்சாமியிடம் தகராறு செய்தார். இதில் அரிவாளால் அழகர்சாமியை அவர் வெட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு முன் போஸ் என்ற முதியவரை வெட்டியதும் தெரிந்தது. கல்யாணகுமார் என்ற அந்நபரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
News December 9, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 9, 2025
மதுரை அருகே தீவைத்து முதியவர் தற்கொலை

அத்திப்பட்டி வடக்கு தெரு சின்னபாண்டி 60, இவர் வீட்டில் டூ வீலருக்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி அவரே தீ வைத்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி, இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


