News January 20, 2025

50-லும் ஆசை வரவேண்டும்: ஏன் தெரியுமா?

image

40 வயதை தாண்டினாலே தாம்பத்ய உறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பலரும் குறைத்து விடுகின்றனர். ஆனால், 50 வயதுக்கு மேல், தம்பதியர் ஆரோக்கியமான தாம்பத்ய உறவை பராமரிப்பது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால், நல்ல தூக்கம் வரும், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், இதயநோய் ஆபத்து குறையும், மன அழுத்தம் குறையும், மொத்த உடல்நலமும் மேம்படும் என்கின்றனர்.

Similar News

News March 11, 2026

CINEMA 360: சூர்யா 47 படத்தில் சிம்பு!

image

*ஜித்து மாதவன் இயக்கி வரும் ‘சூர்யா 47’ படத்தில் கேமியோ ரோலில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம் *ரஜினி நடிக்க மறுத்த அஸ்வத் மாரிமுத்துவின் கதையில் கமல் நடிக்கலாம் என கூறப்படுகிறது *நயன்தாரா, கவின் நடித்து வரும் ‘ஹாய்’ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது * ராஜ் நிடிமோரு இயக்கும் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

image

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை முன்னுரிமை அடிப்படையில் விநியோகித்து வருவதாகவும், முன்பதிவு செய்த இரண்டரை நாளில் விநியோகம் செய்யப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. SHARE

News March 11, 2026

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: நயினார்

image

வரும் தேர்தலில் திமுக நடத்தும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என நயினார் கூறியுள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலானது TN Vs DELHI தேர்தல் என CM ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், இது குடும்ப ஆட்சிக்கும் TN மக்களுக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்தார். மேலும், PM மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தாய்மாமன் சீர் போல பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!