News January 19, 2025

பள்ளி மாணவர்களே ரெடியா

image

பொங்கல் பண்டிகைக்கான 6 நாள் விடுமுறை இன்றுடன் முடிந்ததால், நாளை வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. நாளை முதல் பொதுத்தேர்வுக்கான பாடங்கள் நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பிப்.7 – 14ஆம் தேதிக்குள் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளையும், பிப்.15 முதல் 21ஆம் தேதிக்குள் 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளையும் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

FLASH: காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்தது!

image

<<19343148>>LPG தட்டுப்பாட்டால்<<>> சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை உள்ளிட்ட நகரங்களில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. கேஸ் தட்டுப்பாட்டால் கள்ளச்சந்தையில் ₹500 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, சென்னையில் காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்துள்ளது. தக்காளி கிலோ ₹10, பெரிய வெங்காயம் ₹10- ₹20, சுரைக்காய்- ₹10, முள்ளங்கி ₹10, கேரட்- ₹20, சின்ன வெங்காயம் ₹20- ₹30-க்கு விற்பனையாகிறது.

News March 10, 2026

இனிஷியலை தவிர்த்த விஜய் மகன் ஜேசன்

image

தான் இயக்கும் முதல் படமான ‘சிக்மா’-வில் தந்தை விஜய்யின் இனிஷியலை கூட ஜேசன் சஞ்சய் பயன்படுத்தவில்லை. இது அப்போது பேசுபொருளான நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. நடிகையுடன் விஜய் உறவில் இருப்பது 2021-லேயே தெரியவந்ததால் குடும்பத்தில் பிரச்னை வெடித்ததாம். இதனால், அம்மா சங்கீதாவுக்கு ஆதரவாக இருந்த சஞ்சய், தனது முதல் பட போஸ்டரில் கூட விஜய்யின் இனிஷியலை தவிர்த்து விட்டாராம்.

News March 10, 2026

கேஸ் தட்டுப்பாடு.. PM-ஐ Resign செய்ய சொல்லி கோஷம்

image

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக PM மோடி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதோடு, SIR பணிகளுக்கும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி MP-களின் கடும் அமளியிலும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!