News January 19, 2025

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று (ஜன.19) கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

நெல்லை: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

image

திருநெல்வேலி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

நெல்லை: போலீசாரை வெட்ட முயன்ற 2 பேர் கைது

image

நெல்லை, சுத்தமல்லி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த கருத்தப்பாண்டி (25), மாரிமுத்து (28)-ஐ மறித்த போது, அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். இவர்களை பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.

News November 16, 2025

நெல்லை மக்களே கவனமாக இருங்கள்! எச்சரிக்கை…

image

நாளை (நவ. 17) திங்கள்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகள் நீர் நிலைகளில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!