News January 19, 2025
ஆண்களுக்கு ஆபத்து: எச்சரிக்கும் மருத்துவர்கள்

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
Similar News
News March 16, 2026
தனித்தனி ரூட்டில் செல்லும் அதிமுக, தவெக!

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க நினைத்த டெல்லி தலைமையின் முயற்சி பலனளிக்கவில்லை என தெரிகிறது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் EPS, விஜய் இருவரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததே கூட்டணி சேர முடியாமல் போனதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருந்த தவெக, இன்று, <<19396552>>நாங்கள் கூட்டணி பேசவில்லை<<>> என அறிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 16, 2026
கூட்டணி குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்ற ஆஃபருடன் அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக, அதிமுக, சசிகலா, ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்று தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. மேலும், யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 16, 2026
மாதம் ₹85,000.. கணவரை வாடகைக்கு விட்ட மனைவி!

10 ஆண்டு திருமணம், மகன்(8) இருக்கும் நிலையில், தாய்லாந்து பெண் ஒருவர், தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்துள்ளார். தங்களால் பிரிந்து வாழ முடியாது என காதல் ஜோடி மறுத்த போது, மனைவிக்கு நூதன யோசனை உதித்துள்ளது. கணவன் அந்த உறவில் தொடர மாதம் ₹85,000 Demand செய்துள்ளார். இந்த ஆஃபரை இருவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது செய்தி வெளியாக, பலரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.


