News January 19, 2025

9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – ஆட்சியர்.

image

தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக தற்காலிக பதவி உயர்வுடன் கூடிய பணி நியமனமும், நிர்வாக நலன் கருதி வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிட மாறுதல் வழங்கியும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 3 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Similar News

News August 23, 2025

தஞ்சையில் இத்தனை பழமையான இடங்களா?

image

➡️கல்லணை : 2000 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை பெரிய கோயில் : 1000 ஆண்டுகள் பழமை
➡️தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்: 900 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் : 500 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை அரண்மனை: 500 ஆண்டுகள் பழமை
➡️பீரங்கி மேடை: 400 ஆண்டுகள் பழமை
➡️ஷ்வார்ட்ஸ் தேவாலயம்: 220 ஆண்டுகள் பழமை
➡️மனோரா கோட்டை: 200 ஆண்டுகள் பழமை
➡️ நம்ம ஊரு பெருமைகளை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News August 23, 2025

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

image

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

News August 23, 2025

கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!