News January 19, 2025
ஜூனியர் மகளிர் T20 WC: இந்தியா அபார வெற்றி

மகளிர் U19 T20 WC கிரிக்கெட் தொடரில், மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி வீழ்த்தியது. கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் லீக்கில், டாஸ் வென்ற IND, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய WI அணி 13.2 ஓவர்களில் 44 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய IND அணி, 4.2 ஓவர்களில் 47/1 ரன்கள் எடுத்து வென்றது. வரும் 21ஆம் தேதி நடைபெறும் அடுத்த லீக் ஆட்டத்தில் மலேசியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.
Similar News
News March 11, 2026
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வீசிய ஈரான்

ஈரான் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அம்முனையை மூடிய ஈரான், அதனை தாண்டி சென்ற சில கப்பல்களையும் தாக்கியது. தற்போது இப்பாதையில் கண்ணி வெடிகளை ஈரான் அமைத்து வருவதாக US உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஏற்கெனவே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் LPG விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த செயலால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.
News March 11, 2026
சஞ்சு சாம்சனை அடுத்த கேப்டனாக்க வேண்டும்: கைஃப்

சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினால், அந்த இடத்தை சஞ்சு சாம்சனால் நிரப்ப முடியும் என Ex வீரர் முகம்மது கைஃப் கூறியுள்ளார். 35 வயதாகும் சூர்யகுமார் நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் 31 வயதான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சன் அடுத்த இந்திய கேப்டனாக இருக்கலாம் என கைஃப் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.


