News March 26, 2024
பாக்., தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்திலிருந்து தாசு நோக்கிச் சென்று கொண்டிருந்த சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த மர்மநபர் மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
பிப்ரவரி 5: வரலாற்றில் இன்று

*1971–அப்பல்லோ 14 விண்கலம் நிலவில் தரையிறங்கியது *1976–நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் *1985–கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள் *1992–நெய்மார் பிறந்தநாள் *2000–இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா நினைவு நாள் *2023–நடிகர் டி.பி.கஜேந்திரன் நினைவு நாள்
News February 5, 2026
ஈரான், US அணுசக்தி ஒப்பந்தம்.. தேதி குறிச்சாச்சு!

ஈரான், US இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தை ஓமனின் மஸ்கட் நகரில் வரும் நாளை நடைபெறும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதை சுப்ரீம் லீடர் கொமேனி எதிர்த்த நிலையில், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
News February 5, 2026
2026 தேர்தல்.. ஆக்ஷனில் இறங்கிய சீமான்

சட்டமன்ற தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும் நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அவர் அறிவித்துள்ளார். *எழும்பூர்-சரண்யா, *ஆர்.கே.நகர்-தாயுமானவன், *ஆயிரம் விளக்கு-களஞ்சியம், *துறைமுகம்-பெனஷான் ஷெரிப், *அண்ணாநகர்-சி.சங்கர், *ராயபுரம்-பாபுமைலன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


