News January 19, 2025

சங்கரன்கோவில் வருகை தந்த ஆர்.எஸ்.பாரதி

image

சங்கரன்கோவிலில் இன்று(ஜன.19) நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சங்கரன்கோவில் வருகை தந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, இன்று காலை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 12, 2026

தென்காசி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

தென்காசி: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News March 12, 2026

தென்காசி: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!