News January 19, 2025
அதிகபட்சம் 15 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக, நெல்லை மாவட்டம் நாலுமுக்கு – 14 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி – 12 செ.மீ., நெல்லை மாவட்டம் மாஞ்சோலை & மயிலாடுதுறை தலா 11 செ.மீ., நாகை மாவட்டம் திருப்பூண்டி – 8 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – 7 செ.மீ., சென்னையை அடுத்துள்ள புழல் – 6 செ.மீ. என்று மழைப் பொழிந்துள்ளது.
Similar News
News March 12, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்தது

<<19359319>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹150 குறைந்து ₹14,970-க்கும், சவரன் ₹1,19,760-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்திலிருந்த தங்கம் இன்று குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News March 12, 2026
TN புதிய கவர்னர் இன்று பதவியேற்பு!

தமிழ்நாட்டின் புதிய(பொறுப்பு) கவர்னராக கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேகர் இன்று பதவியேற்க உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 12, 2026
BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.


