News January 19, 2025
தேவர்குளம் இளைஞர் கொலையில் 3 பேர் கைது!

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே இளைஞர் சேதுபதி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், சேதுபதியை கொலை செய்த வெனிஸ் குமார், அவரது நண்பர்கள் வினோத், மனோஜ் ஆகிய 3 பேரை நேற்று(ஜன.18) கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக சேதுபதி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Similar News
News November 16, 2025
நெல்லை: ஓடும் ரயிலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை – வள்ளியூர் இடையே தளபதிசமுத்திரம் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்தவர் குமரி சின்னமுட்டத்தை சேர்ந்த மீனவர் திருமேனி செல்வம் (27) என்பதும் குமரி ரயிலில் பயணித்த போது ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து இளைஞர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
நெல்லை: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

திருநெல்வேலி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 16, 2025
நெல்லை: போலீசாரை வெட்ட முயன்ற 2 பேர் கைது

நெல்லை, சுத்தமல்லி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த கருத்தப்பாண்டி (25), மாரிமுத்து (28)-ஐ மறித்த போது, அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். இவர்களை பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.


