News January 19, 2025

வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் சீனா

image

மின்னணு சாதனங்கள், சோலார், பேட்டரி மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவற்றின் விலை இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சீன முதலீடுகளுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு சீனா பதிலடி கொடுத்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வர்த்தகப் போருக்கு வழிவகுப்பதோடு, சீனாவுக்கே பெரிய பாதிப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

Similar News

News March 14, 2026

கேஸ் சிலிண்டர் புக்கிங்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு

image

நாட்டின் பல பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் SM-ல் புகார் அளித்துள்ளனர். இதனால், LPG கேஸ் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளின் வாசலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி IOC, BPC, HPC நிறுவனங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய மத்திய அரசு புதிய எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மேலே உள்ள போட்டோவை SWIPE செய்து பாருங்க.

News March 14, 2026

விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

image

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News March 14, 2026

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

image

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!