News March 26, 2024
‘4 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை’

அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு ஒரு கடைவிடாமல் வசூலித்தார்கள். மீண்டும் மோடி வேண்டாம் நமக்கு. மீண்டும் மோடி வந்துவிட்டால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து” என்றார்.
Similar News
News February 7, 2026
ஸ்குவிட் கேம் பார்த்த சிறார்களுக்கு மரண தண்டனை

வடகொரியாவில் சிறு சிறு குற்றங்களுக்கு கூட கிம் ஜாங் உன் அரசு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது உண்டு. இதில் சிறியவர், பெரியவர் என வயது பாரபட்சம் கிடையாது. இந்நிலையில், மிகவும் பிரபலமான ஸ்குவிட் கேம் தொடர், K டிராமா பார்த்த பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு படங்களை பார்ப்பதற்கு வடகொரியாவில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
இந்தியா மீதான 25% வரியை நீக்கிய டிரம்ப்

இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, கூடுதலாக விதித்திருந்த 25% வரியை அவர் நீக்கியுள்ளார். முன்னதாக, $500 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து தொழில்நுட்ப, விவசாய, நிலக்கரி பொருள்களை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்திருந்தது.
News February 7, 2026
CM ஸ்டாலினை சந்திக்கும் OPS?

அதிமுக இணைப்பு கதவை EPS மூடியதால் OPS விரைவில் CM ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் OPS முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் நல்ல முடிவு எடுக்கப்பட்டதாகவும், EPS-க்கு எதிராக களமிறங்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் OPS திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


