News January 19, 2025

ஆடுகளுடன் மலையேற முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

image

கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் முஸ்லிம் ஒருவர் ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இவ்விவகாரத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் நேற்று சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு பலிகொடுத்து விருந்து நடத்த திரண்டனர். அவர்களை தடுத்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.

Similar News

News March 10, 2026

மதுரை: ஆபத்தில் உணவகங்கள்; லட்சம் பேருக்கு வேலை இழப்பு

image

மதுரை உணவக உரிமையாளர்கள் சங்க நிர்வாகி குமார், சிலிண்டர் விநியோகம் இரு நாட்களுக்குள் சீரடையாவிட்டால் 3வது நாள் முதல் உணவகங்களை மூட நேரிடும் என எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மூன்றாவது பொது முடக்கத்தை போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வதோடு, மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தகவல்.

News March 10, 2026

BREAKING மதுரை பிரபல ரவுடி கைது!

image

மேலூரை சேர்ந்த சுவாமிநாதன்(54) தனது இடத்தை ரூ.45 லட்சம் பெற்று ராதாகிருஷ்ணன் என்பவருக்கு கடன் பத்திரமாக கொடுத்தார். மீண்டும் அவ்விடத்தை பெற முயன்றதில் கிடைக்காததால், வரிச்சியூர் செல்வத்தை அணுகி ரூ.67 லட்சத்தை கொடுத்து தனது இடத்தை மீட்டு தரும்படி கேட்டார். அவர் அதை செய்யாததால் கோர்ட்டில் சாமிநாதன் வழக்கு தொடுத்தார். மேலூர் போலீசார் நேற்றிரவு செல்வத்தை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

News March 10, 2026

மதுரை: VOTER ID பற்றிய கவலை வேண்டாம்!

image

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.

1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.

2. 1-ஐ தேர்ந்தெடுங்க.

3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க

உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!