News January 19, 2025
13 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி: இபிஎஸ்

திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை மட்டுமே உள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார். 4 வருட திமுக ஆட்சியில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், அவர்களுக்கெல்லாம் 2026இல் அதிமுக ஆட்சியில் விடிவுகாலம் பிறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன், பேரன், குடும்பத்திற்காகவே ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாகவும், வாக்களித்த மக்களை தேர்தல் முடிந்தவுடனேயே மறந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 11, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு என CM சொல்வது பொய்: நயினார்

தமிழகம் உள்பட எங்குமே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றார். ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; கேஸ் தேவைப்பட்டால் ஒரு கேஸ் டீலர் என்ற முறையில் தானே அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News March 11, 2026
ஹாஸ்பிடல்களில் விறகு அடுப்பு: மா.சுப்பிரமணியன்

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹாஸ்பிடல் கேண்டீன்களில் பாதிப்பில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாட்டின் மாற்று ஏற்பாடாக, அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் Induction Stove & விறகு அடுப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


