News January 18, 2025
கருப்பு மையில் கையெழுத்துப் போட்டால் செல்லாதா?

Chequeஇல் Black Ink பேனாவால் கையெழுத்துப் போடுவதை RBI தடை செய்துள்ளதாக தகவல் பரவி வந்தது. இதுபற்றி ஆராய்ந்த PIB Fact Check குழு, அது போலியானது, RBI எந்த மையில் கையெழுத்திடுவது என்பதற்கு எந்தவித வழிகாட்டுதலும் வெளியிடவில்லை என விளக்கமளித்தது. வழக்கமாக பயன்படுத்தப்படும் Blue, Black பேனா பயன்படுத்தலாம். வங்கி அதிகாரிகள் Red Pen-ஐ திருத்தத்துக்கு பயன்படுத்துவதால், அதை மட்டும் தவிர்க்கலாம்.
Similar News
News August 25, 2025
வெற்றிக்கு இதுவே தாரக மந்திரம்!

உழைக்காமல் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, அதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும்போது கடிகாரத்தில் நேரம் பார்க்கத் தோன்றாது. அந்த வேலை சுமையாக இல்லாமல் சுகமான அனுபவமாகவே இருக்கும். வெற்றி பெற்று விட எண்ணம் இருப்பது போல, தோல்விக்கு ஒரு போதும் பயந்து விட கூடாது. பழசு தான் ஆனாலும் அதுவே நிதர்சனம். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி.
News August 25, 2025
சன்னி லியோன் கேரக்டரில் நடிக்கும் தமன்னா?

சன்னி லியோன் நடித்த ராகினி MMS படத்தின் 2-வது பாகம் 2014-ல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் 3-வது பாகத்தில் தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஏக்தா கபூர் இந்த படத்தை ஹாரர் மற்றும் காமெடி பாணியில் உருவாக்க முடிவு செய்துள்ளாராம். முன்பு போல மார்க்கெட் இல்லாததால் கவர்ச்சியாக நடிக்க தமன்னா ஆர்வம் காட்டுவதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
News August 25, 2025
SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதல்.. இந்தியா தங்க வேட்டை!

◆ஆசிய துப்பாக்கி சுடுதல்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
◆ஜூனியர் மகளிர் தெற்காசிய சாம்பியன்ஷிப்: இந்தியா 8- 0 என்ற கோல் கணக்கில் பூட்டானை வீழ்த்தியது.
◆3-வது ODI: 50 ஓவர்களில் ஆஸி., 431 ரன்களை குவிக்க, தென்னாப்பிரிக்கா 155 ரன்களில் சுருண்டது.
◆அமெரிக்க ஓபன்: பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சபலென்கா(பெலாரஸ்) வெற்றி பெற்றார்.