News March 26, 2024
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு அவசியமாகும். CUET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News January 17, 2026
முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை : மூர்த்தி

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை தரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். ஏற்கெனவே அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேறாதபோது, CM-ன் இந்த அறிவிப்பு எப்படி சாத்தியம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் பேசிய மூர்த்தி, CM உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும், முக்கிய துறைகளில் வீரர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
சற்றுமுன்: 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

ரஷ்யாவின் நோவோகுஸ்னெட்ஸ்க் பகுதியில் உள்ள பிரபல ஹாஸ்பிடலில் 9 குழந்தைகள் பிறந்து சிலமணி நேரங்களிலேயே அடுத்தடுத்த சில நாள்களில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஹாஸ்பிடலை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீஸார் விசாரித்ததில், டாக்டர்களின் கவனக்குறைவே இறப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை டாக்டர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News January 17, 2026
தேர்தலில் போட்டியிடலாமா? குழப்பத்தில் இருந்த திமுக!

தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக, கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தது தெரியுமா? 1956-ல் திருச்சியில் 2வது மாநில மாநாடு நடந்தது. அதில் திமுக தேர்தலில் பங்கேற்பது குறித்து 2 வாக்கு பெட்டிகள் அமைத்து தொண்டர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் 1957 தேர்தலில் முதல்முறையாக திமுக போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது.


