News January 18, 2025
கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை, கோவை காந்திபுரம், சாய்பாபா கலானி, சிவானந்தாகாலனி, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகள், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
பட்டாசுக்கடை உரிமம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதுவரை தற்காலிக பட்டாசு கடை அமைக்க 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.
News August 14, 2025
கோவையில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.விண்ணபிக்க<
News August 14, 2025
கோவையில் கொட்ட போகும் மழை

மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.