News January 17, 2025
ஜல்லிக்கட்டை பனை மரத்தில் ஏறிப்பார்த்த நபர்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் இன்று (ஜன.17) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை, பனை மரத்தில் எரிப்பார்த்த பார்வையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விழாக்குழுவினர் அந்த நபரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அந்த நபரை மரத்தில் இருந்து கீழே இறக்கி எச்சரித்து அனுப்பினர்.
Similar News
News July 11, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை, குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் <
News July 11, 2025
சேலம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளமான: https://mtsaed.tn.gov.in/evaadagai எனும் தளத்தை அணுகலாம்.(SHARE)
News July 10, 2025
சேலம்: 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.