News January 17, 2025
நாகர்கோவிலில் வேலை வாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஆனது நாளை (18.01.2025) காலை 9:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 18 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். *ஷேர்
Similar News
News November 15, 2025
குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 15, 2025
குமரி: ரயில் மோதி ஒருவர் பலி

காவல்கிணறு ரெயில்வே தண்டவாளம் அருகே நவ 13ம் தேதி இரவு ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் விசாரணையில் திருவனந்தபுரம் விதுரா பகுதி லாரி டிரைவர் சரத்ராஜ்(32) என்பது தெரியவந்தது. இவர் காவல்கிணறு பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிச்செல்ல அடிக்கடி வந்து செல்வாராம். அவ்வாறு வந்தபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
News November 15, 2025
டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கு தேர்வு

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 16ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் சேவியர் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. 310 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.


