News March 26, 2024
பிரேமலு, பர்த் மார்க் OTT-இல் வெளியீடு

நஸ்லன், மமிதா பைஜு நடித்துள்ள ‘பிரேமலு’ திரைப்படம், வரும் மார்ச் 29ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவான இந்தப் படம், உலகளவில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகர் ஷபீர் மற்றும் மிர்னா மேனன் நடித்துள்ள ‘பர்த் மார்க்’ படமும் அதே தேதியில் ஆஹா (Aha) OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
Similar News
News May 7, 2025
பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம்: SC

தேச நலனுக்காக பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தி உளவுபார்ப்பதில் தவறில்லை என SC அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியினரின் போன் கால்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக 2021-ல் புகார் எழுந்தது. இந்நிலையில், அரசு உளவு சாஃப்ட்வேர் பயன்படுத்தினால் என்ன தவறு? தேச விரோதிகளை உளவுபார்த்தால் தவறில்லை என SC தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதால் பெகாசஸ் அறிக்கையை பொதுவில் வெளியிட முடியாதென கூறியுள்ளது.
News May 7, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
News May 7, 2025
இந்திய அணியில் இடம் பிடிக்கும் சாய் சுதர்ஷன்

நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் GT வீரர் சாய் சுதர்ஷன், இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர், ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதற்கான அணியில், சர்ஃபராஸ் கான், ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார்கள் என்றும் சாய் சுதர்ஷன், கருண் நாயர் இடம் பிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.