News March 26, 2024
தேனி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தேனி மாவட்டத்தில் விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களோ 04546_261730 அல்லது 9363873078 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
இன்றைய தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 10.04.2025 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News April 10, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 10, 2025
தேனியில் நாளை கொட்டப் போகும் மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஏப்.11) கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.