News March 26, 2024
சென்னையில் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம்

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
Similar News
News February 14, 2026
சென்னை: இளம்பெண்ணிற்கு முதியவர் பாலியல் தொல்லை!

வில்லிவாக்கம், இராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த பிப்.10ஆம் தேதி பாபா நகர் ஜிம்மில் பயிற்சி முடித்து வீடு திரும்பும் வழியில், இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர், முகவரி கேட்பது போல் நடித்து தவறாக நடந்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து V-4 இராஜமங்கலம் போலீசார், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (72) என்பவரை நேற்று(பிப்.13) கைது செய்தனர்.
News February 14, 2026
சென்னை: காதலர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் இன்று(பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகையால், மெரினா, கிண்டி பூங்கா, திரையரங்குகள் போன்ற இடங்களில் காதலர்கள் கூடுவர் இந்நிலையில், காதலர் தினத்தில் வழக்கமாக போராட்டங்கள் செய்யும் இந்து அமைப்புகள், இயக்கங்கள், காதலர்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பொது இடங்களில் எல்லை மீறும் ஜோடிகள் மீதும் போலீஸ் நடவடிக்கை பாயும்.
News February 14, 2026
சென்னை: கணவன் – மனைவி துடிதுடித்து பலி!

சென்னையை அடுத்த பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(44). இவரது மனைவி கவிதா(42). இருவரும் ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே சென்ற போது, சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி, படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


