News January 17, 2025

கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற சம்பவத்தில் இன்று தீர்ப்பு

image

2022ல் கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவர் கஷாயத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் அவரின் காதலி க்ரீஷ்மா, க்ரீஷ்மாவின் மாமா நிர்மலாகுமரன் ஆகியோர் குற்றவாளி என நெய்யந்திகரை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் இருந்து க்ரீஷ்மாவின் தாய் விடுவிப்பு. தண்டனை குறித்த விவரங்கள் நாளை (ஜன.18) அறிவிக்கப்படவுள்ளது

Similar News

News November 15, 2025

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கு தேர்வு

image

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 16ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் சேவியர் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. 310 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News November 14, 2025

1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் நடவடிக்கை

image

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனையில் காஞ்சிரக்கோடு எந்த இடத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News November 14, 2025

நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது. (இதன் பயண கட்டணம் ரூ.364) SHARE

error: Content is protected !!