News January 17, 2025

8-வது ஊதிய கமிஷன்: 2026-ல் சம்பளம் எவ்வளவு இருக்கும்?

image

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் கமிஷனின் பரிந்துரை Fitment factor அடிப்படையிலேயே கணக்கிடப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய பேசிக் சம்பளத்தை Fitment factor எண்ணால் (2.28) பெருக்கினால், ஊதிய உயர்வை கணக்கிடலாம். உதாரணமாக, லெவல் 1 பணியாளரின் சம்பளம் ரூ.18,000 எனில், அவரின் புதிய சம்பளம் ரூ.18,000 X 2.8= ரூ.40,944 ஆக (Appr. ரூ.41,000) இருக்கும். DA 70% வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

Similar News

News August 24, 2025

சுனில் கவாஸ்கருக்கு மும்பை கிரவுண்டில் ஆளுயர சிலை!

image

மும்பை வான்கடே மைதானத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் Ex ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1972- 1987 வரை இந்திய அணிக்காக விளையாடிய சுனில் கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஆயிரம் அடித்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்களை(34) அடித்தது என தனது காலக்கட்டத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 24, 2025

விஜய்யை பற்றி சீமான் கூறியது உண்மை: பிரேமலதா

image

விஜய்யை நாங்கள் தம்பி என அழைப்பதாலேயே அவருடன் கூட்டணி வைப்போம் என்று அர்த்தமில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோதும், உடல்நலக் குறைவுடன் இருந்தபோதும் தெரியாத விஜயகாந்த், மறைந்த பிறகே விஜய்க்கு அண்ணனாக தெரிவதாக சீமான் கூறியது உலகறிந்த உண்மை என கூறியுள்ளார். தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு பேசியுள்ளார்.

News August 24, 2025

பாஜகவின் இன்னொரு வடிவம் விஜய்: வன்னி அரசு

image

பாஜக, RSS-ன் இன்னொரு செயல் வடிவம் தான் விஜய் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக மீது வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டில் கட்டமைப்பதுதான் விஜய்யின் அரசியலாக இருக்கிறது என சாடிய அவர், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று சொல்வதன் மூலம் விஜய் தனது அநாகரிகத்தையும், தலைமை பண்பையும் குறைத்திருக்கிறார் என்பதைதான் பார்க்க முடிகிறது எனவும் விமர்சித்தார்.

error: Content is protected !!