News March 26, 2024
அண்ணாமலைக்கு கிடுக்கிப்பிடி போடும் அதிமுக!

கோவை அதிமுக வேட்பாளரை போல கோட்டாவில் படித்து வரவில்லையென அண்ணாமலை நேற்று பேட்டியளித்தார். ஆனால் சிங்கை ராமச்சந்திரனின் தந்தை கோவிந்தராஜ், 1991-1996ஆம் ஆண்டு காலத்தில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். மேலும் அவர் இறந்த போது சிங்கை ராமச்சந்திரனுக்கு 11 வயது. அவர் எப்படி எம்.எல்.ஏ கோட்டாவில் இடம்பெற்றிருக்க முடியும். அதே போல, IIMஇல் எம்.எல்.ஏ கோட்டா இருந்ததா என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News May 7, 2025
3-வது குழந்தை பெத்துக்கலாமா? வேண்டாமா?

3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..

234 தொகுதிகளிலும் கூட திமுக வெற்றி பெறலாம்: CM ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், எந்த கூட்டணி வந்தாலும், எந்த ஏஜென்சிகள் வந்தாலும், திமுக எதைப்பற்றியும் கவலைப்படாது, நிச்சயம் வெற்றிபெறும் என்றார். எமெர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் CM ஸ்டாலின் கூறினார்.