News March 26, 2024
புதுகை அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று(மார்ச்.25) தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாவக்காடு என்ற இடத்தைச் சோ்ந்த க.மோகன்தாஸ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.பின்பு பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 10, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர்
News April 10, 2025
புதுகை: அங்கன்வாடியில் வேலை – ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 281 அங்கன்வாடி பணியாளர், 5 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 196 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்கின்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ <