News March 26, 2024
கடலூரில் எடப்பாடி 30 ஆம் தேதி பிரச்சாரம்!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக வருகின்ற 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News February 15, 2026
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.
News February 15, 2026
கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட 13% மழை அதிகம்!

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 15 வரை இயல்பாக 32.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 13 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.15) அறிவித்துள்ளது.
News February 15, 2026
கடலூர்: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

கடலூர் மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!


