News January 16, 2025
பஸ்களில் கூடுதல் கட்டணமா? இதில் புகார் அளிக்கலாம்

பொங்கல் முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு மக்கள் திரும்ப சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் அளிக்க அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு பஸ் எனில் 94450 14436 எண்ணிலும், தனியார் ஆம்னி பஸ் எனில் 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 எண்களில் புகார் அளிக்கலாம். SHARE IT.
Similar News
News August 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 24 – ஆவணி 8 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: துவிதியை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News August 24, 2025
ஓய்வறையில் கம்பீருக்கு வேற முகம்: ரிங்கு சிங்

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மைதானங்களில் எப்போதும் ஆவேசத்துடன் காணப்படக் கூடியவர். அவர் ஓய்வறையில் எவ்வாறு இருப்பார் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அதில் ஓய்வறையில் கம்பீர் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்றும், அனைவரையும் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனியர் வீரர்களுடன் ஜாலியாக பழகும் தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
வரலாறு காணாத வசூல் செய்த மஹா அவதார் நரசிம்மா

மஹா அவதார் நரசிம்மா திரைப்படத்தின் வசூல் குறித்து hombale films அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 5வது வாரத்திற்குள் நுழையும் மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் இதுவரை உலகளவில் ₹278 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வரலாறு காணாத வசூல் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.