News March 26, 2024

புதுவையில் 2 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

image

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ரவுடிகளை ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்து வருகின்றனர். அதன்படி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்த ஜான்சன், குணசேகர் ஆகிய 2 பேர் ஊருக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு முத்தியால் பேட்டை போலீசார் தேர்தல் அதிகாரி குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Similar News

News October 28, 2025

புதுவை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 28, 2025

புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு!

image

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி மெயின் சாலை சோனியா காந்தி நகர் அருகே 5 பசு மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்தது. அதைத் தொடர்ந்து, மாடுகளின் உரிமையாளரான திருவேட்டக்குடி வெங்கட்ராமன் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News October 28, 2025

புதுச்சேரி: அதிவிரைவு ரயில் ரத்து

image

மோன்தா புயல் காரணமாக புவனேஸ்வரில் இருந்து இன்று (அக்.28) புதுச்சேரிக்கு புறப்பட்டு வரும் அதிவிரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை (அக்.29) மாலை 6:50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வருக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!