News March 26, 2024
பிலிப்பைன்ஸ்க்கு ஆதரவாக நிற்கும் இந்தியா!

சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோர காவல்படை நடத்திய நீர் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். மணிலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘பிலிப்பைன்ஸ் தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கு இந்தியாவின் முழு ஆதரவு உறுதியாக இருக்கும்’ என்றார்.
Similar News
News November 5, 2025
திமுகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்?

PH மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த விவகாரம் அடங்குவதற்குள் அதிமுகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, OPS அணியில் உள்ள Ex அமைச்சரும், MLA-வுமான R.வைத்திலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு ‘Wait and see’ என சூசகமாக பதில் அளித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News November 5, 2025
40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி -கமல் கூட்டணி

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2027 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹிட் படமான ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் – சுந்தர் சி கூட்டணி இணைகிறது. கடைசியாக 1985-ல் ஹிந்தியில் வெளியான கிராப்தார் படத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்திருந்தனர்.
News November 5, 2025
கணவன் – மனைவி சண்டையை தவிர்க்கணுமா? இத பண்ணுங்க

தம்பதியர்களுக்குள் அன்னியோன்னியம் மேம்பட வேண்டும் என்றால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை தேவை. எல்லாம் சரியாக தான் இருக்கிறது, சரியாகத் தான் நடந்து கொள்கிறேன்… ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று கவலைக் கொள்பவரா நீங்கள்? வாழ்க்கைத் துணையின் மனதை கவர என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள போட்டோக்களில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் ஐடியா கொடுக்கலாமே.


