News March 26, 2024
ராமநாதபுரத்தில் மேலும் 3 ஓபிஎஸ்’கள் மனுதாக்கல்

நாமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் நேற்று ஒருவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் இன்று மேலும் 3 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
முதுகுளத்தூர் அருகே பேருந்து விபத்து

முதுகுளத்தூர் அருகேயுள்ள காக்கூர் கிராமத்தில் உள்ள சாலைகள் இரு புறங்களிலும் செடிகள் வளர்ந்து குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணமாக சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணரிப்பு காரணமாக மினிபேருந்து சிக்கிக் கொண்டது. இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
News December 2, 2025
ராமநாதபுரம்: 10th, 12th தகுதி.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 2, 2025
ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.10.92 லட்சம் மோசடி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என சிலர் ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி ரூ.11 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். எந்த லாபமும் வராமல் மேற்கொண்டு பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாலிபர் அனுப்பிய கணக்கில் இருந்து ரூ.10.92 லட்சத்தை மீட்டு ஒப்படைத்தனர்.


