News March 26, 2024

பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தேர்தல் புறக்கணிப்பு

image

மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5 % உள் ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வேண்டி அனைத்து கட்சியினருக்கும் மனுவாக அளித்தனர். எந்த கட்சியும் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என்று பெரம்பலூர் மாவட்ட மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News February 22, 2026

பெரம்பலூரில் துணிகரம்: போலீசார் வலைவீச்சு

image

பெரம்பலூர், விளாமுத்தூர் ரோடு டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பானுமதி (60). இவர் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பானுமதி அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரில் பெரம்பலூர் போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News February 21, 2026

பெரம்பலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 21, 2026

பெரம்பலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

பெரம்பலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

error: Content is protected !!