News January 15, 2025
100 ஆண்டுகளை நிறைவு செய்த அன்னவாசல் காவல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு. 100-ஆண்டு முடிவடைந்ததை அடுத்து காவல் நிலையம் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகிறது இதனையடுத்து காவல் நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் திருமதி லதா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Similar News
News January 15, 2025
புதுகை: வன்னியவிடுதியில் ஆட்சியர் ஆய்வு
ஆலங்குடி வட்டம், வன்னியன்விடுதியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
News January 15, 2025
புதுகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குளத்தூர் வட்டம், மங்கதேவன்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அவர்கள் இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
News January 14, 2025
சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஒருவர் பலி
ஆவுடையார்கோவில், மீமிசல் குமரப்பன் வயல் பகுதியை சேர்ந்த வசந்த் (23), மனோஜ் (20) இருவரும் டூவீலரில் நேற்று அப்பகுதிக்கு சென்றபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்பேத்தி சாலையில் தடுப்புகட்டையில் டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் வசந்த் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனோஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புனவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர்.