News January 15, 2025
பெரம்பலூர்: 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (35). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது நேற்று (ஜன.13) தெரியவந்தது. தற்போது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
பெரம்பலூர்: இதை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தெரிந்து கொள்ள இதை ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
பெரம்பலூர்: பொங்கல் விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள திடலில், ஜன.15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த கலை விழாவை பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளிக்க மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.