News January 15, 2025
மாட்டுப்பொங்கல் நாளில் பசுவை வணங்கினால்….

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News August 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News August 10, 2025
ஒரு விமானத்தை கூட வீழ்த்தவில்லை: பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூரில் பாக்.,-ன் 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக IAF தளபதி அமர் பிரீத் சிங் கூறியிருந்தார். ஆனால், இதை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளார். ஒரு போர் விமானத்தை கூட இந்தியா வீழ்த்தவில்லை எனவும், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் நடுநிலை அமைப்புகள் இதை விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா உண்மையை வெளிக்கொண்டு வர விடாது என்றும் கூறியுள்ளார்.
News August 10, 2025
தோனி, கோலி கொடுத்த அட்வைஸ் இதுதான்: ஆகாஷ்

தோனி, கோலி கொடுத்த அட்வைஸை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நினைவு கூர்ந்துள்ளார். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், பயிற்சி செய்யுங்கள் என கோலி சொன்னதாகவும், பயிற்சி தான் உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் என தோனி சொன்னதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையின் விளையாட்டு, அதில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நம்பிக்கை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.