News January 14, 2025
நாகை மக்களே நீங்கள் ரெடியா?

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 28 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் அதன் பரிசளிப்பு பொதுக்கூட்டம் ஜனவரி 16 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஓட்டப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று மாலை பரிசளிப்பு விழா & பொதுக்கூட்டம் நடக்கிறது.
Similar News
News December 9, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
News December 9, 2025
நாகை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

நாகை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
நாகை: பயணிகள் ரயில் ரத்து!

திருவாரூா் அருகே குளிக்கரை ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு நாகை வழியாக செல்லும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (76820) மற்றும் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (76819) டிச.12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் – தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.


